Home Featured நாடு இளைஞர், மகளிர், புத்ரா, புத்திரி பிரிவுத் தலைவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்!

இளைஞர், மகளிர், புத்ரா, புத்திரி பிரிவுத் தலைவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்!

701
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா தேசிய நிலைத் தேர்தல்களின் ஒரு பிரிவாக மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்திரி பிரிவுகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் இன்று நடைபெற்றன.

MIC-Nominations-Youth-Women wings-Dr Subra

மஇகா இளைஞர் பிரிவினரின் வேட்புமனுத் தாக்கல்களை பெற்றுக் கொள்ளும் மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவும் அவரது தேர்தல் குழுவினரும்…

#TamilSchoolmychoice

இன்றைய வேட்புமனுத் தாக்கல்களில் மஇகா இளைஞர் பகுதித் தலைவராக சிவராஜ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் மகளிர் பகுதித் தலைவியாக மோகனா முனியாண்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் பகுதித் துணைத் தலைவராக தினாளன் ராஜகோபாலுவும் மகளிர் பிரிவின் துணைத் தலைவியாக தங்கராணியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

MIC-Nominations-women-dr subra

மகளிர் பிரிவினரின் வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்ளும் டாக்டர் சுப்ரா – அருகில் மஇகா உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி

MIC-Nominations- puteri-dr subra

மஇகா புத்திரி பிரிவின் வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்கின்றார் மஇகா தேசியத் தலைவர்

மஇகா புத்ரா பிரிவின் தலைவராக யுவராஜா மணியம் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக பத்மராஜா செல்வராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மஇகா புத்திரி பிரிவின் தலைவியாக குணசுந்தரி தேர்ந்தெடுக்கப்பட்டார். புத்திரி பிரிவின் துணைத் தலைவியாக சிவரஞ்சனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

MIC-women leader-mohana-tangarani

மகளிர் பகுதித் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோகனா முனியாண்டியும் – துணைத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கராணியும்…