Home Featured நாடு எம்எச்370: பிலிப்பைன்ஸ் தீவில் மனித எலும்புக்கூட்டுடன் விமானப் பாகம் கண்டுபிடிப்பா?

எம்எச்370: பிலிப்பைன்ஸ் தீவில் மனித எலும்புக்கூட்டுடன் விமானப் பாகம் கண்டுபிடிப்பா?

739
0
SHARE
Ad

pesawat-mas-misteri-hilang-mh370கோத்தா கினபாலு – மலேசியக் கொடியுடன் கூடிய விமானப் பாகம் ஒன்றை தெற்கு பிலிப்பைன்ஸ் தீவு அருகே கண்டதாக நபர் ஒருவர் சபா காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.

தெற்கு பிலிப்பைன்சைச் சேர்ந்த உபியான் தீவில் உள்ள தாவி தாவி பகுதியில், சில நாட்களுக்கு முன்னர் விமானப் பாகம் ஒன்றின் இருக்கையில், பாதுகாப்பு பட்டை அணிந்த நிலையில் மனித எலும்புக் கூடு ஒன்றை தனது உறவினர் கண்டுள்ளதாக சபாவைச் சேர்ந்த நபர், காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.

இது குறித்து சபா மாநில ஆணையர் டத்தோ ஜலாலுடின் அப்துல் ரஹ்மான் கூறுகையில், சில நாட்களுக்கு முன்னர் அந்தத் தீவிற்கு பறவைகளைப் பிடிக்கச் சென்ற அந்த நபரும் அவரது உறவினரும் விமானத்தின் பாகத்தைப் பார்த்ததாகத் தகவல் அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவர் கூறும் அந்த விமானப் பாகம் மாயமான எம்எச்370 பாகமா? என்றும், அவரது தகவலின் உண்மைத் தன்மை குறித்தும் காவல்துறை ஆராய்ந்து வருகின்றனர்.