“தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் தாணு ஒருதலைப்பட்சமான முடிவிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக முடிவு எடுக்கும் முன் உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தவில்லை” என்று தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன்(படம்) மற்றும் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர், தாணுவிற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சங்க விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் எப்போதும் தலையிட்டதில்லை, தாணு தனி நபர்களான சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இந்த முடிவினை எடுத்துள்ளார் என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.
Comments