கோலாலம்பூர் – அண்மையக் காலங்களில் சூர்யாவின் ‘அஞ்சான்’ படம்தான் இணையவாசிகளால் கேலியும், கிண்டலுமாக அதிகமாக ‘கலாய்க்கப்பட்ட’ படமாக இருந்து வந்தது. இப்போது அதனை முறியடிக்கும் விதமாக ‘புலி’ படம் உருவெடுத்துள்ளது.
ஒரு படத்தைப் பற்றி இரசிகர்களிடையே அளவுக்கதிகமாக எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும் வண்ணம் ஒரு படம் விளம்பரம் செய்யப்படும்போது ஏற்படுகின்ற ஆபத்து இதுவென கருதப்படுகின்றது.
அதைத் தொடர்ந்து வெளியாகும் படம் மொக்கையாக, எதிர்பார்ப்புகளுக்கு நேர் எதிர்மாறாக இருக்கும் பட்சத்தில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையத் தளங்களில் இரசிகர்கள் வறுத்தெடுத்துவிடுகின்றார்கள்.
அந்த வகையில் புலி படம் குறித்த நகைச்சுவை மிக்க சில விமர்சனங்கள் இங்கே:
மருத்துவமனையில் இருக்கும் அசல் புலியுடன் ஒப்பிட்டு கிண்டலடிக்கப்படும் படம்…
பாபநாசம் படத்தில் கமலஹாசன் சீரியசாக பேசும் வசனத்தை அப்படியே உல்டா பண்ணியிருக்கின்றார்கள். “இப்போ அஜித் இரசிகர்கள் வருவாங்க. புலி எப்படி இருக்குன்னு கேட்பாங்க. சூப்பரா இருக்குன்னு சொல்லனும். அடிச்சும் கேட்பாங்க. அப்போகூட, சூப்பரா இருக்குனுதான் சொல்லனும்” என கமல் கூறுவதுபோல் ஒரு வாசகர் கலக்கியிருக்கின்றார்.
புலி படம் வெளிவருவதற்கு முன்னால், அந்தப் படம் பாகுபலி படத்துக்கு இணையாக இருக்கும் என்ற அளவில் விஜய் இரசிகர்களால் பெரிது படுத்தப்பட்டது. ஆனால் படம் வெளிவந்ததும், என்ன நிலைமை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அதை விளக்கும் விதமாக, பாக்கியராஜ் நடித்த பழைய முந்தானை முடிச்சு படத்தின் காட்சி ஒன்றை இணைத்து, சின்னப் பையனைப் பார்த்து முதலில் ‘ஜிப்’பைப் போடு எனக் கிண்டலடித்திருக்கின்றார்கள்.
என்னத்தே கன்னையா நடித்த ஒரு படத்தின் காட்சியை வைத்து – முதல் பாதியில் படம் சாகக் கிடக்கும் நிலைமையில் இருக்கின்றது என்றும் – பின்பாதியில் படம் செத்தே விட்டது – என்றும் ஒரு கேலி.
புலி படத்தில் அப்பா விஜய்யின் தலைமுடி ஸ்டைலை வைத்து – கவுண்டமணி, ஓமகுச்சி நரசிம்மன் நடித்த படத்தின் ஒரு காட்சியை இணைத்து – ஒரு கலாய்ப்பு!
-செல்லியல் தொகுப்பு