Home Featured நாடு ஐநா சுகாதார மாநாட்டில் மலேசியப் பேராளர்களுக்குத் தலைமை வகிக்கும் டாக்டர் சுப்ரா!

ஐநா சுகாதார மாநாட்டில் மலேசியப் பேராளர்களுக்குத் தலைமை வகிக்கும் டாக்டர் சுப்ரா!

516
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTகோலாலம்பூர் – ஐக்கிய நாடுகளின் குவாம் தீவில் நேற்று தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறவுள்ள உலக சுகாதார அமைப்புகளின் மேற்கு பசிபிக் வட்டாரக் குழுவின் 66-வது அமர்வில், மலேசியப் பேராளர்களுக்கு மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமை வகிக்கவுள்ளார்.

அது குறித்து டாக்டர் சுப்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு சுகாதாரப் பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் அதை எதிர்க்கும் சுகாதார முறைகளை உருவாக்கத் தேவையான வட்டார ஒத்துழைப்பின் விரிவான அனுமுறையின் அவசியம் குறித்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் தான் வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த 66 வது  அமர்வில், 2014-2015-ம் ஆண்டில் இயற்றப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் செயல்திறன் மற்றும் அனைத்துலக சுகாதாரம் குறித்த ஆய்வுகள், காச நோய், கல்லீரல் தொற்று, உணவுப் பாதுகாப்பு, வெப்பமண்டல நோய் மற்றும் தொழுநோய் ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்படும்.