Home Featured நாடு மலாக்கா வங்கி ஏடிஎமில் குண்டு வெடித்தது!

மலாக்கா வங்கி ஏடிஎமில் குண்டு வெடித்தது!

601
0
SHARE
Ad

Malacca

மலாக்கா –  மலாக்கா ஆயர் கெரோவில் ஏடிஎம் (தானியங்கி பணப்பரிமாற்று இயந்திரம்) ஒன்றில் இன்று காலை குண்டு வெடித்ததாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இன்று அதிகாலை 2 மணியளவில் ஆடம்பரக் கார் ஒன்றில் அங்கு வந்த முகமூடி அணிந்த மூன்று பேர், அங்கு இரண்டு சொந்தமாகத் தயாரிக்கப்படும் வெடிகுண்டை (homemade devices ) வைத்ததாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அதில் ஒரு வெடிகுண்டு அந்த எந்திரத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 9.50 மணியளவில் அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றொரு வெடிகுண்டை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.

படம்: நன்றி ஸ்டார் இணையதளம்.