Home Featured கலையுலகம் விஜய் டிவியில் மீண்டும் (காபி) கலக்க வருகிறார் டிடி!

விஜய் டிவியில் மீண்டும் (காபி) கலக்க வருகிறார் டிடி!

633
0
SHARE
Ad

சென்னை – விஜய் தொலைக்காட்சியின் ‘காபி வித் டிடி’ மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்து கொள்ளாத பிரபலங்களே இல்லை என்று கூறலாம்.

அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் டிடி-க்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் பிரச்சனை. அதனால் தான் மிகவும் பிரபலமான ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி இடையில் நிறுத்தப்பட்டது என்று அண்மையில் பல்வேறு வதந்திகள் பரவின.

அனுஹாசன் நடத்திய அந்த நிகழ்ச்சி டிடி என்ற திவ்யதர்ஷினி கைக்குப் போனவுடன் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

#TamilSchoolmychoice

DD

சுட்டித் தனமாகவும், துடுக்காகவும் நிகழ்ச்சியை வழி நடத்திய திவ்யதர்ஷினியின் கிடிக்கிப்பிடி கேள்விகளில் சிக்கிக் கொண்டு தவித்த நடிகர்கள் பலர். சிலர் வெளிப்படையாகவும் தங்களது ஆசைகளை வெளிப்படுத்தினார்கள்.

இந்நிலையில், மீண்டும் ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதையொட்டி டிடி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஆயுத பூஜை சிறப்பு காபி வித் டிடி-யில் ’10 எண்றதுக்குள்ள’ படத்தின் நாயகன் விக்ரம், நாயகி சமந்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.