Home Featured தமிழ் நாடு “கூகுள் தலைமை பொறுப்புகளில் 3 தமிழ் பிராமணர்கள்” – வழக்கம்போல் சு.சுவாமி சாதிய சர்ச்சை!

“கூகுள் தலைமை பொறுப்புகளில் 3 தமிழ் பிராமணர்கள்” – வழக்கம்போல் சு.சுவாமி சாதிய சர்ச்சை!

938
0
SHARE
Ad

sundar-pichai-swamyசென்னை – பரபரப்பான செய்தியோ அல்லது சர்ச்சைக்குரிய விவகாரங்களோ வேண்டுமானால் பாஜக-வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமியின் டுவிட்டர் பக்கத்தை உடனடியாக பார்க்கலாம். பெரும்பாலான அவருடைய பதிவுகள் எப்பொழுதும் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கும். அந்த வகையில் நேற்றும் அவர் தனது வழக்கத்தை தொடர்ந்துள்ளார்.

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, அந்நிறுவனத்தின் நிர்வாகத்துறை சார்ந்த தலைமை பொறுப்புகளில் சில மாறுதல்களை சமீபத்தில் செய்துள்ளார்.

கூகுளின் ‘டிஸ்பிலே அண்ட் வீடியோ அட்வர்டைசிங்’ (Display and Video Advertising) பிரிவிற்கு நீல் மோகன் மூத்த துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை அத்துறையின் துணைத் தலைவராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மேலும் நீல் மோகன், தனது அறிக்கைகளை விளம்பரம் மற்றும் வணிகப் பிரிவின் மூத்த துணைத் தலைவராக உள்ள ஸ்ரீதர் ராமசாமியிடம் சமர்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியத் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் இவர்கள் மூவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

su.samyஇவர்களின் நியமனம் தொடர்பாக, சுப்ரமணிய சுவாமி வெளியிட்டுள்ள பதிவில், “கூகுள் தலைமை பொறுப்புகளில் 3 தமிழ் பிராமணர்கள்” என அவர்கள் மீது சாதிய முத்திரையை இட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

அவரின் இந்த பதிவிற்கு இணையவாசிகள் பலர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.