Home நாடு லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படைகள் வீரர் இருவர் பலி

லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படைகள் வீரர் இருவர் பலி

640
0
SHARE
Ad

226x233xbf828a61b0305cbf26638d2af6d9d971.jpg.pagespeed.ic.1NNrUxWkJ_லகாட் டத்து, மார்ச் 12 – லகாட் டத்து, தஞ்சோங் பத்துவில் இன்று காலை நமது மலேசியப் பாதுகாப்புப் படையினருக்கும்,ஊடுருவல்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 எதிரிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் துரதிஷ்டவசமாக நமது மலேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். இதற்கு முன் நமது காவல்துறையைச் சேர்ந்த 8 வீரர்கள் பலியாகி இருந்த நிலையில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முதல் வீரர் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியாகியுள்ளார் என்று பாதுகாப்புப்படைத் தலைவர் ஜுல்க்கி பெலி (படம்) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலே வெளியிடப்பட்டிருக்கும் செய்தியின் தொடர்ச்சி பின்வருமாறு:-

மலேசியப் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜுல்க்கி பெலி வெளியிட்டிருந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் மறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் சுடப்பட்டனர்,ஆனால் இரண்டு சடலங்கள் மட்டுமே இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது, எனவே குண்டடிபட்ட அந்த எதிரி காயத்துடன் தப்பி இருக்கலாமென்று நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சாலை விபத்தில் ஒரு வீரர் பலி

அதுமட்டுமின்றி, இன்று லகாட் டத்து நகரத்தை நோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் விபத்திற்குள்ளாகி ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் உயிரிழந்தார் என்றும், மற்றொருவர் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருவதாகவும் ஹம்சா தாயிப் தெரிவித்தார்.