Home Featured கலையுலகம் “தென்னிந்திய நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமாக பெயர் மாற்ற வேண்டும்!”- கமலஹாசன்

“தென்னிந்திய நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமாக பெயர் மாற்ற வேண்டும்!”- கமலஹாசன்

760
0
SHARE
Ad

Kamal-Gouthami-voting-cine artistes associationசென்னை – இன்று காலை தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் ரஜினிகாந்த், யார் தேர்தலில் வென்று வந்தாலும், முதலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து தமிழகத்தின் தொலைக்காட்சி அலைவரிசைகளும், தகவல் ஊடகங்களும் இந்த பெயர் மாற்றத்தை விவாதமாக எடுத்துக் கொண்டு, மிகப் பெரிய சர்ச்சையாக்கி வருகின்றன.

ரஜினியைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில், கௌதமியுடன்  வாக்களிக்க வந்த கமலஹாசன், இதேப் பிரச்சனை பற்றிப் பேசிய போது “ஏற்கனவே நமக்குள் இருக்கும் பிரிவினைகள் போதும். என்னைக் கேட்டால், தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதற்குப் பதிலாக இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றலாம்” எனக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ரஜினி ஒரு கருத்தைச் சொல்ல, அதற்கு நேர் எதிர்மாறாக, கமலஹாசன் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அதைவிட மகிழ்ச்சி தகவல் ஊடகங்களுக்கு வேறென்ன வேண்டும்?

இதுதான் சமயம் என்று, வாக்களிக்க வரும் எல்லா நடிகர்களிடமும் இதே கேள்வியை தகவல் ஊடகங்கள் கேட்க, தற்போது தமிழகத்தின் அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இந்தப் பெயர் மாற்ற விவகாரம் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.