Home Featured கலையுலகம் “என்ன அடி வாங்கினாலும் பின்வாங்கப் போவதில்லை-தேர்தல் நிற்காது”-விஷால் கண்ணீருடன் சூளுரை!

“என்ன அடி வாங்கினாலும் பின்வாங்கப் போவதில்லை-தேர்தல் நிற்காது”-விஷால் கண்ணீருடன் சூளுரை!

531
0
SHARE
Ad

Vishalசென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சற்று முன்பு இந்திய நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில் வாக்களிப்பு மையத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு – கைகலப்பில் நடிகர் விஷால் தாக்கப்பட்டு இடது கையில் காயமடைந்தார்.

அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், தான் எதையும் இப்போதைக்குப் பேசப்போவதில்லை என்றும், மாலை 5.00 மணி வரை தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றே தீரும் என்றும் கண்ணீருடன் – தடுமாற்றத்துடன் கூறினார்.

நடிகை சங்கீதா மீது தாக்குதல் நடத்த ஒரு சிலர் முற்பட்டதாகவும் விஷால் குற்றம் சாட்டினார்.

#TamilSchoolmychoice

“என்னை எவ்வளவு வேண்டுமானாலும் தாக்குங்கள். பெண்கள் மீது கையை வைக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டேன்” என்றும் கூறிய விஷால், “என்னை பத்திரிக்கையாளர்கள் தற்போதைக்கு விட்டு விடுங்கள். நான் மீண்டும் உள்ளே செல்ல வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் தேர்தல் நிறுத்தப்படாது. நடந்தே தீரும்” என்று சூளுரைத்தார்.

சரத்குமார் சார்பில் ரமேஷ் என்ற, நீண்ட முடி கொண்ட ஒரு நபர்தான் தன்னைத் தாக்க வந்ததாகவும் விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.

சங்கீதாவின் பேட்டி

Sangeetha-actress-இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகை சங்கீதா (படம்) பின்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சரத்குமாரே கெட்ட வார்த்தைகளால் தன்னை திட்டிக் கொண்டே அடிக்க வந்தார் என்று தெரிவித்தார்.

விஷால் அணியினர் வழங்கும் தங்களின் வேட்பாளர் பட்டியலை, வாக்களிக்கும் நடிகர்கள் உள்ளே நுழைந்ததும், அவர்களின் கைகளில் இருந்து சரத்குமார் அணியைச் சேர்ந்த ஒரு சிலர் பறித்துக் கொள்வதாகவும் சங்கீதா குற்றம் சாட்டினார்.

இது குறித்து கேட்கப் போனபோதுதான் சரத்குமார் தன்னைத் தாக்க வந்ததாக சங்கீதா புகார் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை அமைதிப்படுத்த விஷால் முனைந்த போது சரத்குமாருக்குத் துணையாக நின்ற ஒருவர் விஷாலைத் தாக்கியதாகவும் சங்கீதா கூறியிருக்கின்றார்.

கைகலப்பைத் தொடர்ந்து விஷால் சற்று நேரம் மயக்கமடைந்ததாகவும் சங்கீதா கூறினார்.