Home Featured நாடு நம்பிக்கையில்லாத் தீர்மானம் – இன்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் – செனட்டர்களை சந்திக்கின்றார் நஜிப்!

நம்பிக்கையில்லாத் தீர்மானம் – இன்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் – செனட்டர்களை சந்திக்கின்றார் நஜிப்!

470
0
SHARE
Ad

najibகோலாலம்பூர் – எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ஹீ லோய் சியான் சமர்ப்பித்துள்ளதைத் தொடர்ந்து, இன்றிரவு தேசிய முன்னணியின் முக்கியக் கூட்டம் நடைபெறுகின்றது.

இந்தக் கூட்டத்தில் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனட்டர்களும் கலந்து கொண்டு பிரதமரிடம் இருந்து விளக்கம் பெறுவர்.

நாளை மலேசிய நாடாளுமன்றத்தின், இந்த ஆண்டுக்கான இறுதிக் கூட்டம் தொடங்குகின்றது. இதில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 28 தீர்மானங்களில் பிரதமர் நஜிப்புக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமும் ஒன்றாகும்.

#TamilSchoolmychoice

இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் (பட்ஜெட்) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஏழு வாரங்களுக்கு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர், 1எம்டிபி பிரச்சனையால் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.