Home Featured கலையுலகம் நடிகர் சங்கத் தேர்தலில் இதுவரை 2,400 வாக்குகள் பதிவு! கைகலப்பில் ஈடுபட்டால் தேர்தல் இரத்து செய்யப்படும்...

நடிகர் சங்கத் தேர்தலில் இதுவரை 2,400 வாக்குகள் பதிவு! கைகலப்பில் ஈடுபட்டால் தேர்தல் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை!

516
0
SHARE
Ad

sarath - nasar_0சென்னை – தனிப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள், விமர்சனங்கள், கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்ளுதல் – இன்று கைகலப்பு என்ற அளவுக்கு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் இதுவரை 2,400க்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்துள்ளனர்.

இதுவரை அஞ்சல் வழி வாக்குகளாக 783 வாக்குகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல் தற்போது பிற்பகல் (இந்திய நேரப்படி 2.00 மணி) வரை 1,612க்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வந்து வாக்களித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து இதுவரை சுமார் 2,400 உறுப்பினர்கள் வரை வாக்களித்துள்ளனர் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரி, இருதரப்புகளும் கைகலப்பில் ஈடுபட்டால், நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.