Home Featured கலையுலகம் விஷால் ஒரு நல்ல நடிகர் தான் – சரத்குமார் கிண்டல்!

விஷால் ஒரு நல்ல நடிகர் தான் – சரத்குமார் கிண்டல்!

446
0
SHARE
Ad

vshlசென்னை – விஷாலை சரத்குமாரின் உதவியாளர் இரும்புக் கம்பியைக் கொண்டு தாக்கியதாக பெரும் சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில், இது தொடர்பாக நடிகர் சரத்குமாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

“விஷால் தாக்கப்படவில்லை. வடிவேலு ஒரு கமெடியன். அவர் சொல்வதைப் பெரிதுபடுத்த வேண்டாம். மேலும் ஊடகங்கள் இருப்பதால் இன்னும் பெரிதாக்கிவிட்டனர்” என்று கூறினார்.

எனினும், பத்திரிக்கையாளர்கள் விடாது, அப்படியெனில் விஷால் தாக்கப்படவில்லையா? என்று கேட்டனர்.

#TamilSchoolmychoice

அதற்கு அவர், “அப்படி ஏதும் நடக்கவில்லை. நானும் கேட்டேன் விஷால் எங்கே என அவர் கேரவனில் இருப்பதாகச் சொன்னார்கள். இப்போது மீண்டும் ஓட்டுச்சவாடிக்கு வந்துவிட்டார், விஷால் ஒரு நல்ல நடிகர் அதை வைத்து அவர் சீன் (காட்சிகளை) உருவாக்கிவிட்டார். மேலும் அவர்கள் தான் காவல்துறை வேண்டும் பிரச்னை வரும் என கேட்டார்கள். எங்களைப் பொருத்தமட்டில் நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.