Home Featured கலையுலகம் நடிகர் சங்கத் தேர்தல்: 2,607 வாக்குகள் பதிவு! வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது!

நடிகர் சங்கத் தேர்தல்: 2,607 வாக்குகள் பதிவு! வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது!

544
0
SHARE
Ad

sarath-vishalசென்னை – நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் 2,607 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.

மொத்தம் 783 வாக்குகள் அஞ்சல் வழி கிடைக்கப் பெற்றன. அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற நேரடி வாக்களிப்பில், 1,824 நடிக, நடிகையர் நேரடியாக வந்து வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் இந்திய நேரப்படி 9.00 மணிக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

வாக்கு எண்ணப்படும் மையத்தில், தேர்தலில் தத்தம் அணிகளுக்குத் தலைமை ஏற்றிருந்த விஷாலும், சரத்குமாரும் அமர்ந்திருந்து வாக்குகள் எண்ணப்படுவதைக் கண்காணித்து வருகின்றனர்.

வாக்குகள் எண்ணப்படுவது வாக்களிப்பு மையத்திற்கு வெளியே உள்ள பெரிய எண்மியத் திரைகளில் (டிஜிடல்) வெளியே இருப்பவர்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.