கோலாலம்பூர் – புகை மூட்டம் இன்னும் சீராகவில்லை என்ற காரணத்தால் நாளை திங்கட்கிழமை பள்ளிகள் மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மகாட்சிர் காலிட் அறிவித்துள்ளார்.
மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், புத்ராஜெயா, கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களிலும், சரவாக் மாநிலத்தில் கூச்சிங், சமரஹான் ஆகிய வட்டாரங்களிலும் சபாவில் தாவாவ் பகுதியிலும் உள்ள பள்ளிகள் மூடப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஏறத்தாழ கடந்த ஒரு மாத காலமாக புகை மூட்ட நிலைமை சீராகாமல் இன்னும் மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றது.