சென்னை: நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் அணிவகுத்துத் திரண்டு வந்து சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு வரிசையாக வாக்களித்தனர். அந்த படக்காட்சிகளில் சில உங்களின் பார்வைக்கு:
புதிய தலைவராகத் தேர்வு பெற்ற நாசர், செயலாளராகத் தேர்வு பெற்ற விஷால் குழுவினர் வாக்களிப்பு மையத்தில் – வாக்களிக்கும் சமயத்தில்…
வாக்களிக்க வந்த ரஜினிகாந்த், வாக்களித்து விட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தை, தமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற சர்ச்சையைக் கொளுத்திப் போட்டார். அதைத் தொடர்ந்து, கமலஹாசன் வாக்களித்துவிட்டு பேசும்போது என்னைக் கேட்டால் இந்திய நடிகர் சங்கம் என்று வைத்துக் கொள்ளலாம் என்று எதிர் கருத்து கூற, நாள் முழுக்க தமிழகத் தொலைக்காட்சி அலைவரிசைகள் அதை வைத்து விவாதங்கள் நடத்தின.
எல்லா விவாதங்களையும் முறியடித்தது நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் கருத்து. இரண்டும் வேண்டாம் – நடிகர் சங்கம் என்று மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
கௌதமியுடன் வாக்களிக்க வந்த கமலஹாசன் – அருகில் கோவை சரளா…
யார் இந்த புதிய இளம் நடிகர் என யோசிக்காதீர்கள் – ஆக்ஷன் கிங் அர்ஜூன்தான் இவர்…
சரத்குமாரின் மகளும், விஷாலின் நெருங்கிய தோழியுமான வரலட்சுமி சரத்குமார்…
அந்தக் காலத்தில் ‘குழந்தையும் தெய்வமும்’படத்தில் குழந்தை நட்சத்திரமாக இரட்டை வேடத்தில் நடித்துப் புகழ் பெற்ற குட்டி பத்மினி…
நடிகர் சங்கச் செயலாளராக இருந்து, விஷாலிடம் தோல்வியுற்ற ராதாரவி…..
நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகாவுடன் வாக்களிக்க வந்தார். சூர்யாவின் தம்பி கார்த்தி பொருளாளராகப் போட்டியிட்டு, நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். சூர்யாவின் தந்தை சிவக்குமாரைக் கடுமையாகத் தாக்கி சரத்குமார் பேச, அந்தக் கருத்துகள் சர்ச்சையாகின.
அந்தக் காலத்தில் அனைவரும் “மைக் மோகன்” என்று கிண்டல் செய்யும் அளவுக்கு எல்லாப் படங்களிலும் பாடகராக நடித்துப் புகழ் பெற்ற நடிகர் மோகன்…
-செல்லியல் தொகுப்பு