Home Featured நாடு உதவித்தலைவருக்குப் பதிலாக மத்திய செயலவைக்குப் போட்டியிட வேள்பாரி முடிவு!

உதவித்தலைவருக்குப் பதிலாக மத்திய செயலவைக்குப் போட்டியிட வேள்பாரி முடிவு!

967
0
SHARE
Ad

vell-paari_mic_300கோலாலம்பூர் – மஇகா தலைமைத்துவத்துடன் நடத்திய விவாதத்திற்கு பின்னர், தான் மஇகா தேசிய உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்குப் பதிலாக, மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கட்சி தலைமையுடன் விவாதித்த பிறகு, நான் மஇகா தேசிய உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்குப் பதிலாக, மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட முடிவெடுத்துள்ளேன். அது அவ்வளவு எளிதாக எடுக்கக்கூடிய முடிவல்ல. உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை அறிவிக்க பிரச்சாரத்திற்காக நான் நாடெங்கிலும் பயணம் செய்தேன். எனக்கு நிறைய பேராளர்கள் ஆதரவு தெரிவித்தனர். எனது சேவையோடு சேர்த்து, எனது தந்தை மஇகா-விற்கு கடந்த காலங்களில் ஆற்றிய சேவைகளுக்காக என்னைத் தேர்ந்தெடுத்து தங்களது நன்றியைத் திருப்பிச் செலுத்துவதாக பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். ஆனால் கட்சியின் ஒற்றுமையைப் பொறுத்தவரையில், மஇகாவிற்கும், சமுதாயத்திற்கும் எது தேவையோ அது தான் எனது தேவையும். எனவே நான் மத்திய செயலவைக்குப் போட்டியிடவுள்ளேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேவேளையில் மத்திய செயலவைக்குப் போட்டியிடும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.” என்று வேள்பாரி தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் உதவித் தலைவர் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டு, மத்திய செயற்குழு பதவிக்குப் போட்டியிடுவதால், வேள்பாரி வெகு சுலபமாக மத்திய செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.