கோலாலம்பூர் – நாடாளுமன்றத் தேர்வுக் குழு உறுப்பினராக டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்குப் பதிலாக டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி நியமனம் செய்வதற்கான தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்குப் பதிலாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியமும், முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்குப் பதிலாக அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான டத்தொஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயிலும் நியமிக்கப்படுவதற்கான தீர்மானங்களையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்..
இவர்களைத் தவிர, இந்தக் குழுவில் பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஜோசப் எந்துலு பெலாவுன், லியாவ் மற்றும் லிம் கிட் சியாங் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகர் அமின் மூலியா தலைவராகவும் அவருடன் இந்த 6 உறுப்பினர்களும் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.