இனி நடிகர் சங்க விவகாரங்கள் எதிலும் தலையிடப் போவதில்லை என்றும், தன் மீது வீண் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவிட்டன என்றும் நா தழுதழுக்க பேசி ஒப்பந்தத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் ஒப்படைத்தார் சரத்.
எல்லாம் ஒருவழியாக சுமூகமாக முடிந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டிருக்கையில், இரு அணிக்கும் மீண்டும் மோதலை உருவாக்கும் படியாக சரத்குமாரின் மனைவி ராதிகா டுவிட்டரில் இன்று கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
அதில், “தவறான குற்றச்சாட்டுகளுக்காக அவமானத்தால் தலைகுனியுங்கள் நண்பர்களே. சரத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதோடு, நிறுத்திக் கொண்டுவிட்டால் பரவாயில்லை. இதன் தொடர்ச்சியாக சிம்பு எதுவும் சொல்லி மீண்டும் பிரச்சனையைக் கிளறி விடுவாரோ என்று அஞ்சுகிறது தமிழக சினிமா வட்டாரங்கள்.