Home Featured கலையுலகம் இன்று முதல் மலேசியத் திரையரங்குகளில் ‘முத்துக்குமார் வாண்டட்’

இன்று முதல் மலேசியத் திரையரங்குகளில் ‘முத்துக்குமார் வாண்டட்’

608
0
SHARE
Ad

கோலாலம்பூர் –  மலேசியா, இந்தியா கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘முத்துக்குமார் வாண்டட்’.

இன்று முதல் நாடெங்கிலும் பல முக்கிய நகரங்களில் திரைக்கு வருகின்றது.

MKW

#TamilSchoolmychoice

எம்.பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக மலேசியாவைச் சேர்ந்த எஸ்.கே.சரண் நஷிரா, ஹரிதாஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் நிழல்கள் ரவி, ஃபாத்திமா பாபு, வி.சி.ஜெயமணி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பிரபல தமிழகக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.

மலேசியாவின் முன்னணி இசையமைப்பாளர் சுந்தரா இப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். சுந்தராவின் ஆஸ்தான பாடலாசிரியரான கோக்கோ நந்தா பாடல்வரிகள் எழுதியிருப்பதோடு, பிரபல பாடகர்களான நரேஷ் ஐயர், திவாகர் உள்ளிட்டோர் உடன் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.