Home Featured நாடு இரண்டு புகார்களின் அடிப்படையில் மகாதீர் மீது விசாரணை – சாஹிட் தகவல்

இரண்டு புகார்களின் அடிப்படையில் மகாதீர் மீது விசாரணை – சாஹிட் தகவல்

622
0
SHARE
Ad

zahidhamidicitizen1606கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை பதவி விலகுமாறு வலியுறுத்தியதற்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் விசாரணை செய்யப்படுவார் என உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

“துன் மகாதீருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருக்கும் இரண்டு புகார்களின் அடிப்படையில் அவரை விசாரணை செய்வோம். அதில் ஒரு புகார் கிள்ளானில் பெறப்பட்டது (33074/14). அந்தப் புகார் குற்றவியல் சட்டம் பிரிவு 500-ன் கீழ் விசாரணை செய்யப்படும்” என்று சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ஜிஞ்சாங் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் புகார் (18448 /2015)-ம் குற்றவியல் சட்டம் பிரிவு 500-ன் கீழ் விசாரணை செய்யப்படும் என்றும், இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சட்டத்துறைத் தலைமைக்கு கடந்த அக்டோபர் 9-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது என்றும் சாஹிட் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

 

 

Comments