Home Featured நாடு அக் 31ல் பூமியை நெருங்குகிறது ராட்சத விண்கல் – நாசா தகவல்!

அக் 31ல் பூமியை நெருங்குகிறது ராட்சத விண்கல் – நாசா தகவல்!

585
0
SHARE
Ad

வாஷிங்டன் – பூமியில் மோதினால் கடும் விளைவை ஏற்படுத்தும் வகையில் மிகப் பெரிய ராட்சத விண்கல் ஒன்று மணிக்கு 1,25,529 கி.மீ்ட்டர் வேகத்தில் நெருங்கி வருவதாக நாசா அறிவித்துள்ளது.

science-asteroid-earth-flyby

அந்த விண்கல்லுக்கு 2015 டி.பி 145 எனப் பெயரிட்டுள்ள நாசா, அந்த விண்கல் 4,99,000 கி.மீட்டர் துாரத்தில் வந்து வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி பூமியைக் கடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு பூமியை தற்போது ஒரு ராட்சத விண்கல் நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கல் சுமார் 280 மீட்டர் முதல் 620 மீட்டர் வரை விட்டம் கொண்டது. மணிக்கு 1,25,529 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கல், பூமியை தாக்காமல் புவிசுற்றுவட்டப் பாதையை கடந்து செல்லும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை இந்த விண்கல் பூமியில் மோதினால் கடும் விளைவுகள் ஏற்படும் எனவும், ஓசோன் மண்டலம் முற்றுலும் அழிவதால், பருவ நிலை மாற்றங்கள் நிகழும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.