கோலாலம்பூர் – நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்த காரணத்திற்காக ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் 6 மாதங்களுக்கு தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தீர்மானத்திற்கு நாடாளுமன்றத்தில் 107 உறுப்பினர்கள் ஆதரவும், 77 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
அதன் பின்னர் லிம் தனக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பில் கூறுகையில், “நான் கடந்த 40 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். இதுநாள் வரையில் இப்படி வருத்தமடைந்ததில்லை. எனது இடைநீக்கத்தை எண்ணி வருந்தவில்லை ஆனால் இங்கு நடப்பதை எண்ணி தான் வருந்துகின்றேன்”
“இது நாடாளுமன்றத்திற்கே அவமானம். எப்படி நீங்கள் அனைவரும் விழுங்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.