Home கலை உலகம் “எதற்காகவும் தேசிய விருதுகளை திருப்பிக் கொடுக்க மாட்டேன்” – நடிகை சோபனா

“எதற்காகவும் தேசிய விருதுகளை திருப்பிக் கொடுக்க மாட்டேன்” – நடிகை சோபனா

1155
0
SHARE
Ad

shobana1சென்னை – இந்தியாவில் சமீபகாலமாக எழுத்தாளர்கள் பலர், தங்களது சாகித்ய அகாடமி விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகின்றனர். இதற்கு காரணம், நாட்டில் மதச் சார்பின்மை குறைந்து வருவதாகவும், மதம் குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கும் எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக நடிகையும், பரத நாட்டிய கலைஞருமான நடிகை சோபனாவிடம்  பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “விருதுகள் என்பது உரிய நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும். காலம் தாழ்த்தி கொடுக்கப்படும் விருதுகள் சிறப்பானதாக இருக்காது. நான் சினிமாவில் நடிகத் தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே தேசிய விருதுகளை பெற்றுவிட்டேன்.”

“அதனால் என்ன காரணங்களுக்காகவும் நான் என் விருதுகளைத் திருப்பித் தர மாட்டேன். மற்றபடி என்ன சர்ச்சை காரணங்களுக்காக சிலர் தங்களது விருதுகளைத் திருப்பித் தருகிறார்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களில் இருக்கும் பிரபலங்கள், “எழுத்தாளர்களும், கலைஞர்களும் அரசுக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்ட, தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.