Home Featured உலகம் இந்திய பெண்களை பாங்ரா நடனம் ஆடி அசத்திய கனடாவின் புதிய பிரதமர்! (காணொளி)

இந்திய பெண்களை பாங்ரா நடனம் ஆடி அசத்திய கனடாவின் புதிய பிரதமர்! (காணொளி)

702
0
SHARE
Ad

justinஒட்டாவா – கனடாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமராக 43 வயதான ஜஸ்டின் ட்ரூதியே பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், அவரின் வெற்றியை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய – கனடியன் சங்கத்தினர் சமீபத்தில் பாராட்டு விழா நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட ட்ரூதியேவை, நிகழ்ச்சியில் பாங்ரா நடனம் ஆடிக் கொண்டிருந்த இளம் பெண்கள் தங்களுடன் ஆட வருமாறு அழைத்தனர். அவரும் தான் ஒருநாட்டின் பிரதமர் என்பதையும் மறந்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கத்துடன் பாங்ரா நடனம் ஆடி அசத்தினார்.

அதன் காணொளியைக் கீழே காண்க:

#TamilSchoolmychoice