Home Featured தமிழ் நாடு “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” – வைகோ கிளப்பும் அடுத்த சர்ச்சை!

“நேதாஜி உயிருடன் இருக்கிறார்” – வைகோ கிளப்பும் அடுத்த சர்ச்சை!

541
0
SHARE
Ad

23-1442992348-vaiko24234-600-jpgசென்னை – நட்பு ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படும் முக்கிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுள் நேதாஜி சுபாஷ் சந்திரபோசும் ஒருவர். காந்தியை விமர்சிக்கும் கூட்டம் கூட நேதாஜியின் புகழ்பாடாமல் இருந்ததில்லை. அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள அவரின், மரணம் தொடர்பான சர்ச்சைகள் இன்னும் முடிவிற்கு வந்த பாடில்லை.

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக நேதாஜி இன்றும் உயிருடன் வாழ்ந்து வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை ஒருவரும் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டதாகத் தெரியவில்லை. அந்த வரிசையில் மதிமுக தலைவர் வைகோவும் தன்னிடம் நேதாஜி உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் நினைவு நாளில் ஆயுதபூஜை நடக்கிறது. நேதாஜி உயிருடன் இருப்பதாக கடந்த 1946-ம் ஆண்டில் காந்தியடிகள் தெரிவித்தார். நேதாஜி தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு ஏன் மறைக்கிறது?”

#TamilSchoolmychoice

“நேதாஜி உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அவற்றை விரைவில் வெளியிட்டு அனைவரின் முகத்திரையையும் கிழிப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் நேதாஜி உயிருடன் இருப்பதற்கான சான்றுகள் உள்ளது என்றால் அதனை வெளியிடுவதில் என்ன சிக்கல்கள் இருக்கப்போகிறது? அப்படியே சிக்கல்கள் இருந்தாலும், அனைத்தையும் மக்கள் மன்றத்தில் முன்வைப்பேன் என்று கூறும் வைகோ, இதை மட்டும் இன்றளவும் ஏன் தாமதம் செய்து வருகிறார் என்பது தெரியவில்லை.