Home இந்தியா எச்ஐவி இருப்பது தெரிந்தும் 300 பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்ட கொலைபாதகன்!

எச்ஐவி இருப்பது தெரிந்தும் 300 பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்ட கொலைபாதகன்!

601
0
SHARE
Ad

HIVசெகந்தராபாத் – சமீபத்தில் ஐதராபாத்தின் முக்கிய நகரமான செகந்தராபாத்தில், திருட்டு வழக்கு தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட அவனிடம், காவல்துறையினர் வேறு ஏதேனும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளானா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அப்போது அவன் வெளியிட்ட தகவல் காவல்துறையை அதிர வைத்தது. தகாத உறவினால் எச்ஐவி பாதிப்பிற்குள்ளான அவன், தனக்கு நோய் இருப்பது தெரிந்தவுடன் பலரையும் இந்நோய்க்கு ஆளாக்க திட்டமிட்டுள்ளான். அதனைத் தொடர்ந்து கடந்த 8 மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பாதுகாப்பற்ற உறவு வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளான். இதில் பலர் குடும்பப் பெண்கள் என்பதும் அவனது வாக்குமூலத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

இவனது கொலைபாதக செயலினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.