Home Featured கலையுலகம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலராகிறார் கமல்ஹாசன்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலராகிறார் கமல்ஹாசன்!

494
0
SHARE
Ad

Kamal-Haasan-Vishalசென்னை – நடிகர் சங்கத்தில் தனக்கு எவ்வித பதவிகளும் வேண்டாம் என கமல் கூறியிருந்த நிலையில், அவர் நடிகர் சங்கத்தின் அறங்காவலராக இருக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக நடிகர் விஷால் இன்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றபின், அந்த அணியின் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களில் ஒருவராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்திருப்பதாக சங்கத்தின் செயலாளராக இருக்கும் விஷால் கூறியுள்ளார்.

மேலும் அவர், “இனி நடிகர் சங்கத்தில் பாண்டவர் அணி என்பது இருக்காது. அனைவரும் ஒரு அணியாக இணைந்து செயல்படுவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.