Home இந்தியா கூட்டணிக்கு வாங்க..ஆனால்? – விஜயகாந்துக்கு ராமதாஸ் நிபந்தனை!

கூட்டணிக்கு வாங்க..ஆனால்? – விஜயகாந்துக்கு ராமதாஸ் நிபந்தனை!

653
0
SHARE
Ad

ramadossசென்னை – அன்புமணி ராமதாஸை, முதல்வர் வேட்பாளராக தேமுதிக ஏற்றுக்கொண்டால் எங்களது கூட்டணியில் அவர்களை வரவேற்க நாங்கள் தயார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது இதுகுறித்து ராமதாஸ் கூறியதாவது:-

“எங்கள் கட்சி சார்பில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளோம். இதை ஏற்று தேமுதிக எங்களோடு கூட்டணிக்கு வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

vijayakanthஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு விஜயகாந்த் வந்தாலும் வருவார், கண்டிப்பாக அன்புமணியை அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.