Home உலகம் இந்தோனேசியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து – 17 பேர் பலி!

இந்தோனேசியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து – 17 பேர் பலி!

554
0
SHARE
Ad

indoஜகார்த்தா – இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தின் தலைநகர் மனடோவில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் இன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 17 பேர் பலியானதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மனடோவில் இயங்கி வந்த மூன்றடுக்கு மாடி கேளிக்கை விடுதி (karaoke bar) ஒன்றின் இரண்டாவது தளத்தில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குறிப்பிட்ட அந்த தளத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கேளிக்கை நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்ததால் தீ விபத்து குறித்து அறியாமல் இருந்துள்ளனர். அதற்குள் அந்த தளத்தில் தீ முழுமையாக பரவியுள்ளது. எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தில் அந்த தளத்தில் இருந்த 17 பேர் உடல் கருகி பலியானதாகக் கூறப்படுகிறது.

indo1மேலும், அந்த சமயத்தில் தீயினால் கரும்புகை பரவியதால், பலருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு தீயை அணைத்துள்ளனர். குறிப்பிட்ட அந்த கட்டிடத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.