Home Featured நாடு அம்னோ தலைவர்கள் தைரியமாக செயல்பட வேண்டும் – மொகிதீன் வலியுறுத்து

அம்னோ தலைவர்கள் தைரியமாக செயல்பட வேண்டும் – மொகிதீன் வலியுறுத்து

514
0
SHARE
Ad

Tan-Sri-Muhyiddin-Yassin2-1ஜொகூர் பாரு- அம்னோ தலைவர்கள் நல்ல நோக்கங்களுக்காக குரல் கொடுக்க தயங்கக் கூடாது என அக்கட்சியின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வலியுறுத்தி உள்ளார்.

ஜொகூர் பாருவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், தாம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் கட்சியின் எதிர்கால நலனைக் கருதியே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

“அம்னோவில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளின் காரணமாக நான் நிச்சயமாக புதுக்கட்சி தொடங்க மாட்டேன். ஏனெனில் புதுக்கட்சி என்பது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. அம்னோ உருமாற்ற நடவடிக்கைக்கு ஆட்பட வேண்டும். எனது வாழ்க்கை முழுவதும் அம்னோவிலேயே இருந்துள்ளேன். கட்சிக்காகவே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். எனது அனுபவத்தில் புதுக்கட்சி தொடங்குவது அவ்வளவு சுலபமல்ல.”

#TamilSchoolmychoice

“அம்னோ தலைவர்கள், குறிப்பாக கிளைத் தலைவர்கள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் எந்த விஷயத்திலும் குரல் கொடுக்க தயங்கக் கூடாது. கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் எதைக் கேட்க நினைக்கிறார்களோ அதை பொறுப்பில் உள்ளவர்கள் கேட்க வேண்டும்” என்று மொகிதீன் வலியுறுத்தினார்.

அம்னோவில் ஒருசிலர் வெளிப்படையாகப் பேசுவதற்கு மிகுந்த அச்சம் கொண்டுள்ளதாகவும், வாய் திறந்தால் கட்சியில் பதவி பறிபோய்விடும் என்பதால் தயங்குவதாகவும் மொகிதீன் மேலும் தெரிவித்தார்.