Home Featured நாடு மின் சிகரெட்டை முற்றிலும் தடை செய்ய அரசாங்கம் முயற்சி!

மின் சிகரெட்டை முற்றிலும் தடை செய்ய அரசாங்கம் முயற்சி!

562
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTகோலாலம்பூர் – வேப்பிங் எனப்படும் மின் சிகரெட்டை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ சாத்தியங்களையும் சுகாதாரத்துறை ஆராயும் என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

“அதை முடிவு செய்தவுடன், தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். அந்த அதிகாரம் எங்களுக்குக் கிடைத்தால் அது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் மலேசியாவில் வேப்பிங்கிற்கு முற்றிலும் தடை வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice