Home Featured உலகம் “இந்தியா வேண்டாம்.. என் உயிருக்கு ஆபத்து” – குற்றவாளி சோட்டா ராஜன் கெஞ்சல்!

“இந்தியா வேண்டாம்.. என் உயிருக்கு ஆபத்து” – குற்றவாளி சோட்டா ராஜன் கெஞ்சல்!

570
0
SHARE
Ad

chottaபாலி – இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தன்னை அங்கு அனுப்ப வேண்டாம் என சோட்டா ராஜன் இந்தோனேசிய காவல்துறையிடம் மன்றாடியுள்ளார்.

என்றாலும், அவரை இந்தியாவிற்குக் கொண்டு வருவதா? என்பதை குற்றப்புலனாய்வுத் துறை தான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்தோனேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

1990-களில் மும்பையை ஆட்டிப்படைத்த தாவூத் இப்ராகிமின் கூட்டாளியும், இந்திய காவல்துறை 20 வருடங்களாக தேடி வந்த முக்கிய குற்றவாளியுமான சோட்டா ராஜன், இந்தோனேசியாவின் பாலி நகரில் சில நாட்களுக்கு முன்னர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.