Home Featured கலையுலகம் ‘வேதாளம்’ படத்தில் அஜீத்தின் தோற்றம் – விஜய் பாராட்டு

‘வேதாளம்’ படத்தில் அஜீத்தின் தோற்றம் – விஜய் பாராட்டு

863
0
SHARE
Ad

KdM-vசென்னை- ‘வேதாளம்’ படத்தில் அஜீத்தின் தோற்றம் நன்றாக இருப்பதாகப் பாராட்டியுள்ளார் நடிகர் விஜய்.

அண்மையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. லட்சக்கணக்கானோர் அதைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் விஜய்யும் அந்த டீசரைப் பார்த்தாராம். டீசர் மட்டுமல்லாமல், அஜீத்தின் புதிய தோற்றமும் அவரைக் கவர்ந்துவிட்டதாம். இதையடுத்து அஜீத்துக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். அதன் படப்பிடிப்பு தளத்தில் வைத்துதான் ‘வேதாளம்’ டீசரை பார்த்துள்ளார். அவரது பாராட்டுக்கு அஜீத் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி மற்றவரைப் பாராட்டுவது வாடிக்கையாக உள்ள போதிலும், இருவரது ரசிகர்களும் நட்பு ஊடகங்களிலும், பொதுவெளிகளிலும் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

‘வேதாளம்’ முருங்கை மரம் ஏறிய தகவலை விரைவில் மீண்டும் கேட்க வாய்ப்புண்டு.