Home Featured கலையுலகம் ரஜினிக்கு டத்தோ பட்டம் வழங்கப்படுமா?

ரஜினிக்கு டத்தோ பட்டம் வழங்கப்படுமா?

537
0
SHARE
Ad

Rajnikanth_change_org_petition_07022015_840_573_100கோலாலம்பூர் – நடிகர் ஷாருக்கான், ஜாக்கிசான் வரிசையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் மலேசியாவில் டத்தோ பட்டம் வழங்கப்படுமா? என்பது தான் தற்போது மலேசிய இளவட்டங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதமே இதற்கென தனியாக ஒரு இணை கோரிக்கை மனுவைத் திறந்த சிலர் அதை நட்பு ஊடகங்களின் வழியாகப் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், கபாலி படப்பிற்காக ரஜினி தற்போது மலேசியாவை மையம் கொண்டிருக்கும் நிலையில், அவர் இந்தியா திரும்புவதற்குள் அதற்கான நல்ல செய்தி வழங்கப்படுமா என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, மலாக்கா ஆளுநர் அவரைச் சந்தித்து விருந்து படைத்ததோடு, மலேசியாவிலுள்ள மலாய்காரர்கள், சீனர்கள் என அனைவரும் விரும்பும் மனிதராக ரஜினி திகழ்வதால், இப்பேச்சு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.