Home Featured நாடு “இதோ எனது 30-பேர் அணி!” – மத்திய செயலவை வேட்பாளர்களுக்காக டாக்டர் சுப்ராவின் நாடளாவிய பிரச்சாரம்!

“இதோ எனது 30-பேர் அணி!” – மத்திய செயலவை வேட்பாளர்களுக்காக டாக்டர் சுப்ராவின் நாடளாவிய பிரச்சாரம்!

565
0
SHARE
Ad

Subramaniam-MICகோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த உடனேயே – 30 பேர் கொண்ட தனது மத்திய செயலவை அணிக்காகத் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடக்கியுள்ளார், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்.

ஞாயிற்றுக்கிழமை வேட்புமனுத்தாக்கல் முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டாக்டர் சுப்ரா, அனைவரும் எதிர்பாராத விதமாக, மத்திய செயலவைக்குப் போட்டியிடும் 30 பேர் கொண்ட குழுவைத் தான் தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார்.

தேசியத் துணைத் தலைவர், தேசிய உதவித் தலைவர் பதவிகளுக்கான போட்டியில் மட்டும் தான் நடுநிலை வகிக்கப் போவதாகவும், யாருக்காகவும் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்றும் அறிவித்த சுப்ரா, ஆனால் மத்திய செயலவைக்காக மட்டும் 30 பேர் கொண்ட ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறி அதற்கான காரணங்களையும் விளக்கினார்.

#TamilSchoolmychoice

MIC-Logo-Featureகட்சித் தேர்தல்களில் நடுநிலை வகிக்கப் போவதாகக் கூறி வந்த சுப்ரா, இப்போது தனது நிலைப்பாட்டிலிருந்து விலகி, தனக்கென ஓர் அணியை உருவாக்குகின்றாரே என்ற வாதங்கள், வேட்புமனுத் தாக்கல் நாளன்றே  கட்சியினர் ஒரு சிலரிடமிருந்து முணுமுணுப்பாகப் புறப்பட்டது.

இருப்பினும், வேட்புமனுத் தாக்கலின் முடிவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சுப்ரா அளித்த அரசியல் காரணங்கள் நியாயமானதாகவும், மஇகாவின் நடப்பு அரசியல் சூழலுக்குப் பொருத்தமானதாக இருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சுப்ரா நாடளாவிய பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை வேட்புமனுத் தாக்கல் முடிந்த அடுத்த நாளே பினாங்கு, கெடா மாநிலங்களில் தனது பிரச்சாரங்களைத் தொடக்கினார் சுப்ரா.

அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை, நாட்டின் மிகப் பெரிய எண்ணிக்கையிலான பேராளர்களைக் கொண்ட சிலாங்கூர் மாநிலத்தின் பேராளர்களைக் கிள்ளானின் சந்தித்தார் சுப்ரா.

நேற்று புதன்கிழமை மலாக்கா மாநிலப் பேராளர்களிடையே ஏன் 30 பேர் கொண்ட அணியை நான் ஆதரிக்கின்றேன் என்பது குறித்த விளக்கங்களை வழங்கிய சுப்ரா, இன்று கூட்டரசுப் பிரதேசப் பேராளர்களைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால், அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டு, இன்று மீண்டும் கெடா மாநிலத்தில் பேராளர்களைச் சந்திக்கின்றார் சுப்ரா.

கூட்டரசுப் பிரதேசப் பேராளர்களை அடுத்த ஓரிரு நாட்களில் சந்திக்கவிருக்கும் சுப்ரா, தொடர்ந்து மற்ற மாநிலங்களுக்கும் வருகை தரவிருக்கின்றார்.

நாளை: “ஏன் 30 பேர் மட்டும் கொண்ட மத்திய செயலவை வேட்பாளர் அணியை நான் ஏன் ஆதரிக்கின்றேன்?” – மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா தரும் விளக்கங்கள் – வாதங்கள் என்ன?