Home Featured கலையுலகம் ‘காலையில் கபாலி மாலையில் செல்ஃபி’ – ஓய்வின்றித் தவிக்கும் ரஜினி!

‘காலையில் கபாலி மாலையில் செல்ஃபி’ – ஓய்வின்றித் தவிக்கும் ரஜினி!

704
0
SHARE
Ad

Rajiniமலாக்கா – 65 வயதிலும் ரசிகர்களுக்காக ஓய்வின்றி நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கபாலி படப்பிற்காக தற்போது மலாக்காவில் பிரபல விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

நாள் முழுவதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு, நேற்று மாலை தங்கும்விடுதிக்கு ஓய்வெடுப்பதற்காகத் திரும்பிய அவரை அங்கு காத்திருந்த ரசிகர்கள் பலர் சூழ்ந்து கொண்டு பாசமழை பொழிந்துவிட்டனர்.

இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. ரஜியை அவர்களிடமிருந்து போராடி மீட்பதற்குள் அவரது பாதுகாவலர்கள் படாதபாடு பட்டுவிட்டதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையிலும், ரசிகர்களுடன் செல்ஃபி (தம்படம்), கைக்குலுக்கள் என பாசப் போராட்டங்களைக் கடந்து விடுதியின் ஒன்றாவது தளத்திற்குச் சென்ற ரஜினிகாந்த், அங்கிருந்த படி சற்று நேரம் ரசிகர்களுக்கு கைகாட்டி கும்பிட்டு தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின் போது ரஜியின் கையில் லேசான காயமும், கீறலும் ஏற்பட்டதாக அவரது பாதுகாவலர்கள் மூலம் விசயம் வெளியே கசிந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்ட ரஜினி கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அதிலிருந்து மீண்டார். இந்நிலையில் ரசிகர்களுக்காக ரஜினி வயதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து வருகின்றார்.  படப்பிடிப்பிற்காக வந்த அவருக்கு ஓய்வும் தேவை என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எண்ணமாக உள்ளது.