Home Featured நாடு ஜசெக சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் கோபிந்த் சிங் டியோ, கணபதி ராவ் வெற்றி!

ஜசெக சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் கோபிந்த் சிங் டியோ, கணபதி ராவ் வெற்றி!

557
0
SHARE
Ad

Gobind Singh 440 x 215பெட்டாலிங் ஜெயா – நேற்று ஞாயிற்றுக்கிழமை பரபரப்புடன் நடைபெற்ற ஜனநாயக செயல்கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் இந்தியர்களான கோபிந்த் சிங் டியோ, கணபதி ராவ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜசெக கட்சியின் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. அதில் கோபிந்த்சிங் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு மொத்தம் 736 வாக்குகள் கிடைத்தன.

அவருக்கு அடுத்ததாக, 649 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார் ரோனி லியூ. பண்டமாரான் தொகுதியின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ரோனி, சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

#TamilSchoolmychoice

அவரையடுத்து, 554 வாக்குகள் பெற்று ஹன்னா இயூ மூன்றாவது இடத்திலும், 495 வாக்குகள் பெற்று ஜசெக நடப்பு மாநிலத் தலைவர் டோனி புவா நான்காவது இடத்திலும் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் தவிர ஓங் கியான் மிங், தெங் சாங் கிட், இயோ பீ யின், கணபதி ராவ், லாவ் வெங் சான், இடி இங், பிரியான் லாய், இங் சூய் லிம், தியாவ் வே கெங் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.