Home Featured நாடு விரைவில் நஜிப், ரஜினி சந்திப்பு!

விரைவில் நஜிப், ரஜினி சந்திப்பு!

516
0
SHARE
Ad

Najib Rajiniகோலாலம்பூர் – மலேசியாவிற்கு கபாலி படப்பிடிப்பிற்காக வருகை புரிந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் துறை அலுவலகத்திற்கு கபாலி குழுவினரின் சார்பில் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தீபாவளி பண்டிகைக்குப் பின் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரேசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அப்துல் மாலிக் டாஸ்திகீர் கூறுகையில், “பிரதமர் துறை அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்களிடமிருந்து விரைவில் பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்”.

#TamilSchoolmychoice

“பிரதமர் தனது தேதியை உறுதிப்படுத்திய பின்னர், அன்றைய நாள் கபாலி படப்பிடிப்பை ஒத்தி வைப்போம். பிரதமரும், ரஜினிகாந்தும் இருவருமே சந்தித்துக் கொள்ள விரும்புகின்றனர். இது நடக்கும் என்று நம்புகின்றோம்” என்று அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் 21-ம் தேதி வரை ரஜினிகாந்த் மலேசியாவில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகின்றது.