Home Featured இந்தியா பாலியில் சிபிஐ அதிகாரிகள் குழு – சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதில் தீவிரம்!

பாலியில் சிபிஐ அதிகாரிகள் குழு – சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதில் தீவிரம்!

553
0
SHARE
Ad

chotarajanபாலி – சிபிஐ அதிகாரிகள், டெல்லி, மும்பை நகரங்களின் முக்கிய காவல்துறை அதிகாரிகள் என ஆறு பேர் கொண்ட குழு, இந்தோனேசியாவில் கைதாகி உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனை, இந்தியா அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் பாலி கிளம்பியது. நேற்று பாலி சென்றடைந்த அந்த குழுவினர் இந்தோனேசிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, இந்தோனேசியாவில் இருக்கும் இந்திய தூதரகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரி சஞ்சீவ் குமார் சோட்டா ராஜனை சந்தித்து பேசியுள்ளார். அவரின் இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது. சோட்டா ராஜன் கைது செய்யப்பட்ட பிறகு, அவரை இந்திய அதிகாரி ஒருவர் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் அனைத்தும் இன்று இந்தோனேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

சுமார் 20-வது வருடங்களாக இந்தியா தேடி வந்த சோட்டா ராஜன், கடந்த மாதம் 25-ம் தேதி பாலியில் இந்தோனேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.