கூச்சிங் – மிரி அருகே முலு குகைப் பகுதியில் அழகான புதிய குகை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக சரவாக் முதலமைச்சர் அட்னான் சாத்தெம் நேற்று இரவு அறிவித்துள்ளார்.
6 மில்லியன் ஆண்டுகள் பழமையான அந்தக் குகை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதைக் கண்டறிந்த குழுவினர் யார் என்பதை அட்னான் குறிப்பிடவில்லை.
“கண்டறியப்பட்டுள்ள இந்தக் குகை சரவாக்கிற்கும், மாநில சுற்றுலாத்துறைக்கும் மிகவும் நன்மை தரக்கூடியது” என்று அட்னான் நேற்று இரவு சரவாக் வனவியல் இரவு விருந்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முலு குகை அருகே ‘டீர் குகை’ மற்றும் ‘கிளியர் வாட்டர் குகை’ என்ற பெயரில் இரண்டு குகைகள் ஏற்கனவே பிரபலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.