Home Featured கலையுலகம் பாலன்ராஜ் இசையில் கமலுக்காக ‘உலகத்தில் ஒருவன்’ – தூங்காவனம் சிறப்புப் பாடல்!

பாலன்ராஜ் இசையில் கமலுக்காக ‘உலகத்தில் ஒருவன்’ – தூங்காவனம் சிறப்புப் பாடல்!

635
0
SHARE
Ad

Balanrajகோலாலம்பூர் – தீபாவளியை முன்னிட்டு இன்னும் மூன்று நாட்களில் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், மலேசிய இசையமைப்பாளரும், கமல்ஹாசனின் தீவிர ரசிகர்களில் ஒருவருமான பாலன்ராஜ், தனது சக நண்பரும் இசையமைப்பாளருமான ஜகதீசுடன் இணைந்து ‘உலகத்தில் ஒருவன்’ என்ற பெயரில் கமல்ஹாசனின் புகழைச் சொல்லும் படியான பாடலை உருவாக்கியுள்ளனர்.

Balan

(இடமிருந்து: இசையமைப்பாளர்கள் ஜெகதீஸ், பாலன்ராஜ்)

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டணி ஏற்கனவே, கடந்த ஆண்டு கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘உலகநாயகன்’ என்ற பெயரில் உருவாக்கிய பாடல், கமல்ஹாசன் அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதோடு, பாபநாசம் திரைப்படம் தொடர்பாக சன்டிவியில் இடம்பெற்ற கமல்ஹாசனின் பேட்டியின் போது அவருக்குப் பின்னணிப் பாடலாக ஒளிபரப்பப்பட்டு பெருமை சேர்த்தது.

Kamal

இதனிடையே, இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, மலேசிய கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பில் சென்னை சென்றுள்ள பாலன்ராஜ், நேற்று கமல்ஹாசனை நேரில் சென்று சந்தித்து அவரிடம், தான் இசையமைத்த தூங்காவனம் பாடலை அளித்ததோடு, கமலின் கைப்பட எழுதப்பட்ட நன்றி மற்றும் வாழ்த்துக் கடிதத்தையும் பெற்றுள்ளார்.

பாலன்ராஜ் குழுவினரின் இசையில் வெளிவந்துள்ள தூங்காவனம் பாடல்:-