Home Slider கூட்டணி ஆட்சி குறித்து ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

கூட்டணி ஆட்சி குறித்து ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

563
0
SHARE
Ad

stalin_2279600gசென்னை – தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், திமுக தங்கள் கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து வருகின்றன. கூட்டணி வேண்டும் என்றால் விஜயகாந்திற்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என தேமுதிக மறைமுகமாக வலியுறுத்தி வரும் நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலின் எந்த கட்சிக்கும் ஆட்சியில் பங்கு இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறையை மக்கள் ஏற்கவே மாட்டார்கள். 1980-ம் ஆண்டு இதேபோல் திமுக – காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால் மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.”

“தமிழகத்தில் தற்போதுள்ள நிலைமை அப்படியே இருக்காது. கட்சிகள் திசைமாறத்தான் செய்யும். தற்போதைய கூட்டணி நிலைமை என்பது அடியோடு மாறவே செய்யும்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஸ்டாலினுக்கு விஜயகாந்த் சவால்vijayakant

இதற்கிடையே விஜயகாந்த் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “அடுத்து திமுக-வின் ஆட்சிதான்னு ஸ்டாலின் சொல்றாரு. கூட்டணி இல்லாம எங்க தனியா நில்லுங்க பாப்போம்? திமுக, அதிமுக ரெண்டு பேரும் தனிச்சு நின்னு உங்க பலத்த காட்டுங்க பார்ப்போம். நாங்களும் தனிச்சு நிக்குறோம்” என்று அவர் திமுக-விற்கு நேரடியான சவால் விடுத்துள்ளார்.