தங்களின் அடுத்த கட்ட செயல்பாடு குறித்து ரயானி ஏர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவி அழகேந்திரன் கூறுகையில், “லங்காவி-கோலாலம்பூர், லங்காவி-கோத்தாபாரு இடையே விமான போக்குவரத்து துவங்க உள்ளது. அதேபோல், வெளிநாடுகளுக்கான எங்கள் நிறுவனத்தின் விமான போக்குவரத்து அடுத்த வருடம் முதல் துவங்க இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே மலேசியா ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா, மலிண்டோ ஏர், ஃபயர்ஃப்ளை ஆகிய நிறுவனங்கள் லங்காவியை விமான போக்குவரத்து மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், ரயானி ஏர் நிறுவனமும் இணைந்துள்ளதன் மூலம் இந்த தீவிற்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், சுமார் 3.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் லங்காவிக்கு சுற்றுலா வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.