Home Slider ஆயுத ஊழல் வழக்கு – விரைவில் கைதாகிறார் கோத்தபய ராஜபக்சே!

ஆயுத ஊழல் வழக்கு – விரைவில் கைதாகிறார் கோத்தபய ராஜபக்சே!

624
0
SHARE
Ad

Sri Lanka's Secretary of Defense Rajapaksa gestures during a commemoration ceremony of fallen soldiers in Ganemullaகொழும்பு – இலங்கையில் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது இராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபக்சே, ஆயுத சேமிப்பு கிடங்கு அமைத்ததில் ஊழல் செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் பிறகு சிறிசேனா அதிபராக பதவியேற்றது முதல் ராஜபக்சே ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் புகார்கள் மீது விசாரணைகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.

இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் புகார்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் சமீபத்தில் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையின் படி, கோத்தபய அடுத்த சில நாட்களுக்குள் கைதாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.