Home Featured இந்தியா இன்று பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன!

இன்று பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன!

749
0
SHARE
Ad

Bihar-India-locationபாட்னா – இந்தியாவே பரபரப்புடன் எதிர்பார்க்கும் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் இன்று வெளியாகின்றன. ஆளும் பாஜகவின் ஆட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடியின்  தலைமைத்துவத்திற்கும் இந்த மாநிலத்தில் தொடர்ந்து ஆதரவு இருக்கின்றதா என்பதை நிர்ணயிக்கும் தேர்வுக் களமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகின்றது.

modi,nithishகட்டம் கட்டமாக நடைபெற்று முடிந்த பீகார் மாநிலத்தின் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குகளும் இந்திய நேரப்படி காலை 8.00 மணி முதல், மாநிலம் முழுமையிலும் உள்ள 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில்  எண்ணப்பட்டு, காலை 10.00 மணிக்குள் எந்த அணி முன்னணியில் இருக்கின்றது என்பது தெரிந்து விடும்.

பாஜக சார்பு கட்சிகள் முன்னிலை வகிக்கும் என பெரும்பாலான தகவல் ஊடகங்களும், கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன என்றாலும், ஒரு சில ஊடகங்கள் நிதிஷ்குமார், லல்லு பிரசாத், காங்கிரஸ் இணைந்த கூட்டணி வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளன.

#TamilSchoolmychoice