அதிலும் இந்த தீபாவளிக்கு அதிரடியாக பல சிறந்த திரைப்படங்களை விண்மீண் அலைவரிசையில் ஒளிபரப்புகின்றது ஆஸ்ட்ரோ.
தீபாவளிக்கு முதல் நாள் கமலஹாசனின் ‘உத்தமவில்லன்’, விஜய்-முருகதாஸ் இணைப்பில் உருவான ‘கத்தி’ ஆகிய படங்களோடு, தமிழ் சினிமா சரித்திரத்தில் நிரந்த இடம் பிடித்து விட்ட ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படமும் எச்டி ஒளிபரப்பில் விண்மீன் அலைவரிசையில் இடம்பெற்றது.
தீபாவளி நாளன்று, இரண்டு சிறந்த படங்கள் ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டன.
ரஜினிகாந்தின் ‘லிங்கா’, மணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி’ ஆகியவையே அந்த இரண்டு படங்கள்.
தீபாவளிக் கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக இன்று புதன்கிழமையும் விண்மீன் வழங்கும் சிறப்புத் திரைப்படங்கள் தொடர்கின்றன.
ஜோதிகாவை மீண்டும் திரைக்குக் கொண்டு வந்த ‘36 வயதினிலே’
சூர்யாவுடனான திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் ஒன்றிப் போன ஜோதிகாவையே மனம் மாற்றி மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்த படம் இது.
ஜெயம் ரவி-ஹன்சிகா இணைப்பில் ‘ரோமியோ ஜூலியட்’
பட்டி தொட்டியெங்கும் அனிருத் குரலில் ஒலித்த ‘டண்டனக்கா’ பாடல் இடம் பெற்ற படம் இது.
பார்த்து மகிழுங்கள் இரசிகர்களே!
-செல்லியல் தொகுப்பு