Home Featured கலையுலகம் வரி மோசடி செய்ததாக ஷாருக்கானிடம் 4 மணி நேரம் விசாரணை!

வரி மோசடி செய்ததாக ஷாருக்கானிடம் 4 மணி நேரம் விசாரணை!

660
0
SHARE
Ad

sharukமும்பை – கடந்த 2009-ல் கே.கே.ஆர் அணியின் பங்குகளை குறைந்த விலைக்கு, வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்றதில் வரி மோசடி நடந்ததாக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடிகர் ஷாருக்கானிடம் தொடர்ந்து 4 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் அளிக்க வருமாறு ஷாருக்கானுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அமலாக்க துறை அதிகாரிகளிடம் அவகாசம் கேட்டிருந்தார்.

இதையடுத்து சமீபத்தில் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தென் மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு ஷாருக்கான் நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து 4 மணி நேரமாக சரமாரி கேள்விகள் கேட்டுள்ளனர்.

ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருப்பவர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.