Home Featured கலையுலகம் எம்ஜிஆரிடம் கமல் செய்த குறும்பு – சுவாரசிய தகவல்!

எம்ஜிஆரிடம் கமல் செய்த குறும்பு – சுவாரசிய தகவல்!

888
0
SHARE
Ad

MGR-and-Kamal-From-an-old-collection.சென்னை – தமிழ் சினிமாவின் பன்முக வித்தகர் என்று ஒருவரை அழைக்கலாம் என்றால் பெரும்பாலானோர் கண்ணை மூடிக் கொண்டு சுட்டிக் காட்டும் ஒருவர் நடிகர் கமல்ஹாசன். ‘கலைத்துறைகாகவே  உருவாக்கப்பட்டுள்ளார்’ என்று புகழப்படும் கமல்ஹாசன், சினிமாவில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்னர் உதவி இயக்குனர், நடன இயக்குனர் என பல்வேறு கலை சார்ந்த பணிகளை செய்துள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி என பல ஜாம்பவான்களுக்கு நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்துள்ளார். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், நடிகர் எம்ஜிஆர், கமலிடம் செல்லமாக கோபித்துக் கொண்ட சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்றில் வெளியாகி உள்ள செய்தியில், “கமல்,  ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற திரைப்படத்திற்காக அப்படத்தின் கதாநாயகன் எம்ஜிஆருக்கு நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கமலின் நடன அசைவுகளை கவனித்த எம்ஜிஆர், ‘குறும்புக்காரா’ என்று கோபித்துக் கொண்டாராம். அதன் பிறகு தான், கமல், எம்ஜிஆருக்கு சிவாஜிக்குரிய நடன அசைவுகளை செய்து காண்பித்து இருக்கிறார் என்று தெரிய வந்ததாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.